சென்னையில் பாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 57 வயது மதிக்கத்தக்க பாட்டி, காசி விஸ்வநாதர் கோயில் மடம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார்.
கணவனை பிரிந்த அவர் கடந்த ஆறு வருடமாக பூ கட்டி விற்பனை செய்து வருகிறார்.
அண்ணா நகரைச் சேர்ந்த 67 வயதான கரிகாலன் என்பவர், நேற்று அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்த பாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தவறான உறவுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாட்டி, முதியவர் கரிகாலனின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டு இருக்கிறார். இதில் தடுமாறிய அவர் பின்னர், கோபத்தின் உச்சிக்கு சென்று கீழே கிடந்த கல்லை எடுத்து பாட்டியின் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட முதியவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய டிபி சத்திரம் போலீசார் பெண்ணை மானபங்க படுத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
கலை.ரா
ஈரோடு எம்.எல்.ஏ உடல் இறுதி ஊர்வலம்: ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி!
“ஆளுநர் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவர் அல்ல” – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!