தமிழக சட்டப்பேரவை விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9-ம் தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற உள்ளார். மரபுப்படி ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் மற்றும் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூடி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதனை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
பரந்தூர் விமான நிலையம், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை ஆகியவை குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பலாம் என்பதால் அதை எதிர்கொள்வது, பெண்களுக்கு மாத உரிமைத் தொகை வழங்குவது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
அதோடு இந்த ஆண்டுக்கான ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் முதன்முறையாக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பிரியா
வரி கட்டாமல் ஏமாற்றினால் இனி ஆக்ஷனே வேறயாம்: பரபர எச்சரிக்கை!