congress

காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்!

அரசியல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அண்மைக்காலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்சிக்கு நல்ல தலைமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டு மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில் மாநிலந்தோறும் நிர்வாகிகள் மாற்றமும் நடந்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநில பொறுப்பாளராக இருந்த தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் மாற்றப்பட்டிருக்கிறார்.

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி மோதல் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு மாணிக்கம் தாகூர் வழங்கினார். அதை ஏற்று அவரை கோவா மாநில பொறுப்பாளராக நியமித்துள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.

மாணிக்கம் தாகூருக்கு பதிலாக தெலங்கானா மாநில பொறுப்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சரும், மகாராஷ்டிரா மாநில சட்டமேலவை முன்னாள் உறுப்பினருமான மாணிக்ராவ் தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த கோவா மாநிலப் பொறுப்புதான் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

அதேவேளையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவே நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கலை.ரா

நீலகிரி: உறைய வைக்கப்போகும் பனி

பொங்கல் கரும்பு கொள்முதலில் ஊழல்? – பகீர் கிளப்பும் எடப்பாடி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *