Cyclone Alert: சூறாவளிக்காற்று வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்!

Published On:

| By Manjula

மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும், யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்று (ஏப்ரல் 3) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் மற்ற இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல் 4) தென் மாவட்டங்கள் மற்றும்  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்காற்று 40-45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”, என்று தெரிவித்துள்ளது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: தயவுசெஞ்சு நீங்களே டீமை கலைச்சிருங்க… பறக்கும் மீம்ஸ்கள்!

IPL 2024: முக்கிய போட்டிகளை ‘மிஸ்’ செய்யும் பவுலர்… சென்னை அணி மீளுமா?

‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share