IPL 2024: முக்கிய போட்டிகளை ‘மிஸ்’ செய்யும் பவுலர்… சென்னை அணி மீளுமா?

விளையாட்டு

சென்னை அணி அடுத்ததாக ஹைதராபாத், கொல்கத்தா அணிகளை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளை வங்காள தேசம் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் மிஸ் செய்யவுள்ளதாக தெரிகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி எதிர்கொண்டு வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியை சந்தித்த சென்னை அணி, 3-வது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது.

அடுத்ததாக ஏப்ரல் 5-ம் தேதி ஹைதராபாத் அணியையும், ஏப்ரல் 8-ம் தேதி கொல்கத்தா அணியையும் சென்னை அணி எதிர்கொள்கிறது. கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருக்கிறது.

இந்தநிலையில் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது. டி 2௦ உலகக்கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெறுவதால், அதற்கான விசா வேலைகள் தொடர்பாக முஸ்தபிசுர் வங்காள தேசம் செல்கிறார்.

IPL 2024: 156.7 கி.மீ வேகம்… ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த மயங்க் யாதவ்

அவருக்கு இதுதொடர்பாக நாளை (ஏப்ரல் 4) அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளது. இதனால் தன்னுடைய முன்னாள் அணியான ஹைதராபாத்திற்கு எதிராக அவர் விளையாட வாய்ப்பில்லை.

ஒருவேளை பாஸ்போர்ட் வெரிபிகேஷனில் தாமதம் எதுவும் ஏற்பட்டால், கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியையும் அவர் மிஸ் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

நடப்பு ஐபிஎல்லை பொறுத்தவரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் கேப்பிற்கு சொந்தக்காரராகவும்  முஸ்தபிசுர் இருக்கிறார். எனவே இரண்டு போட்டிகளை முஸ்தபிசுர் மிஸ் செய்தால், அது சென்னை அணிக்கு மிகப்பெரிய சரிவையே ஏற்படுத்தும்.


முஸ்தபிசுர், பதிரனா தவிர்த்து மற்ற பவுலர்கள் யாரும் சென்னை அணிக்கு பெரிதாக இதுவரை கைகொடுக்கவில்லை. எனவே ருதுராஜ் என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதற்கிடையில் அடுத்த இரண்டு போட்டிகளில் முஸ்தபிசுர்க்கு பதிலாக ஷர்துல் தாகூர் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி டேபிள் டாப்பராக மாறுமா? என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!

GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

கள்ளழகர் திருவிழா : நீர் பீய்ச்சி அடிக்க தடை விதித்த நீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *