ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருப்பது மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கும் சிறந்த வருமானத்தை வழங்குவதற்கும் ஒரு நம்பகமான இடமாகவும் விளங்குகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகையில் (SBI FD Scheme) சிறந்த வருமானத்தையும் வழங்குகிறது.
SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்து, குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு Fixed Deposit கணக்குகளைத் திறக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 364-நாள் FD திட்டத்தில் நாம் ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு FD கணக்கைத் திறக்கலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு FD கணக்கைத் திறக்க விரும்பினால், அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான குறுகிய கால FD கணக்குகளுக்கு 3.05% முதல் 3.65% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்த வங்கி, 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட கணக்குகளுக்கு 5.90% முதல் 6.50% வரையிலான வருமானத்தை வழங்குகிறது. எஸ்பிஐ 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவு கொண்ட கணக்குகளுக்கு 6.05% முதல் அதிகபட்சமாக 7.15% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 364-நாள் FD திட்டத்தில் ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தால், ஒரு சாதாரண குடிமகன் முதிர்வுத் தொகையாக ரூ. 2,12,030 உடன் ரூ. 12,030 நிலையான வட்டியையும் பெறுவார். இதேபோல், நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 364-நாள் FD திட்டத்தில் ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ. 2,13,073 உடன் ரூ. 13,073 நிலையான வட்டியையும் பெறுவீர்கள்.
அதேபோல், நீங்கள் மிகவும் மூத்த குடிமகனாக, அதாவது 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 364 நாள் நிலையான வைப்புத் திட்டத்தில் ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ. 13,283 நிலையான வட்டியுடன் சேர்த்து மொத்தமாக ரூ. 2,13,283 பெறுவீர்கள்.
