அனைவரும் வீட்டில் இருக்கும் நாளில் கொஞ்சம் வித்தியாசமாகச் சமைக்கலாம் என்று தோன்றும். சைவ சமையல்களைவிட அசைவ சமையலுக்குத் தனி சிறப்பு உண்டு. இன்றைய நாளில் இந்த தவா ஃபிஷ் ஃப்ரை செய்யுங்கள். சிறந்த நாளுக்கான உற்சாகத்தை உங்கள் குடும்பத்தினருடன் அனுபவியுங்கள்.
என்ன தேவை?
வஞ்சரம் (Seer fish) – 3 அல்லது 4 துண்டுகள் (அல்லது வவ்வால் – Pomfret)
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – தேவைக்கேற்ப
கரம் மசாலாத்தூள் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு
தண்ணீர் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மீன் துண்டுகள்மீது கத்தியால் கீறல் போடவும். எண்ணெய், கொத்தமல்லித்தழை தவிர மற்ற எல்லா பொருள்களையும் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். மீன் துண்டுகளின் மேல் இருபுறமும் தடவவும்.
30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு தவாவில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மீன் துண்டுகளை இரண்டு புறமும் பொன்னிறமாகும்வரை, சிறிது பர்னிங் எஃபெக்ட் (burning effect) அதாவது கருக்கும் தன்மை வரும்வரை வைத்து எடுத்து, கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
அஜீரணமா… எந்த உணவை எடுத்துக்கொள்வது, எதைத் தவிர்ப்பது?
