ரூ.41 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை!

Published On:

| By Kavi

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இன்று 376 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாகவே உள்ளது. இந்தநிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தங்கம் விலை ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் 40 ஆயிரத்து 80 ரூபாயாக உயர்ந்தது.

ADVERTISEMENT

இதுபோன்று ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி 40 ஆயிரத்து 544 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 47 ரூபாய் அதிகரித்து 5115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் கொண்ட ஒரு பவுன் தங்கம் 40, 920ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 44,224 ரூபாயிலிருந்து 44,640 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வெள்ளி விளையும் இன்று கிலோவுக்கு 2,200  ரூபாய் அதிகரித்து 74 ,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரியா

கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம்: கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்?

காலியிடங்களை மூன்று ஆண்டுகளில்  நான்கு தவணைகளில்  நிரப்பலாம்: ராமதாஸ்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share