தங்கம் : விலை குறைந்தும் மகிழ்ச்சி இல்லை!

தமிழகம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 விலை குறைந்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கம் விலை இன்று (டிசம்பர் 16) தொடர்ந்து 2ஆவது நாளாக விலை குறைந்துள்ளது.

நேற்று (டிசம்பர் 15) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ. 120 விலை குறைந்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 15 விலை குறைந்து ரூ. 5,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 128 விலை குறைந்து ரூ. 44,032-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 16 விலை குறைந்து ரூ. 5,504-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைந்து வந்தாலும், இன்னும் ரூ. 40 ஆயிரத்துக்கு கீழ் வரவில்லை என்பதால் நகைபிரியர்கள் தங்கம் வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

வெள்ளி

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ. 72.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 200 விலை குறைந்து ரூ. 72,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

மார்கழி மாதம் பிறப்பு: திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!

அன்று பால், இன்று நெய்: விலை உயர்த்திய ஆவின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *