VIDEO: ‘சாவை காட்டிட்டாங்க பரமா’… ‘நட்ட நடுவானில்’ விமானத்தில் பயங்கரம் – பயணிகள் மரண ஓலம்… பதறியடித்து பறந்து வந்த இஸ்ரேல் போர் விமானம்… திக் திக் சம்பவம்!

Published On:

| By Mathi

Flight-Fight- DUbai

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தில் நடுவானில் இரண்டு விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் பயணிகள் பீதிக்குள்ளாகினர்.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு flydubai நிறுவனத்தின் FZ1073 விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விமானம் ஜோர்டான் வான்பரப்புக்குள் சென்றபோது, விமானத்தை இயக்கிய இரு விமானிகளுக்கும் இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

விமானிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் விமானி ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து விமானத்தில் இருந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரகால எச்சரிக்கை அனுப்பப்பட்டது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் விமானம் திடீரென பாதையை மாற்றியதுடன், 2 நிமிடங்களில் சுமார் 17,400 அடி கீழே இறங்கியது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர்.

ADVERTISEMENT

ஜோர்டான் வான்பரப்புக்குள் சென்ற விமானம் அங்கிருந்து திரும்பி சவுதி அரேபியா நோக்கி சென்றது. பின்னர் தபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானிகள் இருவருக்கும் இடையே சண்டை ஏன் ஏற்பட்டது ? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share