எடப்பாடிக்கு அந்த தைரியம் கிடையாது : ஜவாஹிருல்லா

By Kavi

|

Published on 25 Sep 2023, 9:15 PM

பாஜகவுடனான தொடர்பை நிரந்தரமாக துண்டிக்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகிக் கொள்கிறது என்று இன்று (செப்டம்பர் 25) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “இந்த கூட்டணி முறிவு எப்போதும் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ADVERTISEMENT

பாஜகவின் தற்போதைய தலைவர் அண்ணாமலையை பதவி நீக்கம் செய்து, தங்களுக்கு இணக்கமான ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கான அதிமுகவின் தந்திரம் இது.

அதையும் தாண்டி, பாஜகவுடனான தொடர்பை நிரந்தரமாக துண்டிக்க அதிமுகவுக்கோ அல்லது அதன் தலைமைக்கோ தைரியம் கிடையாது” என்று விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

பிரியா

“இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது” : கூட்டணி முறிவு குறித்து சி.டி.ரவி பதில்!

அதிமுக கூட்டணியில் நாம் தமிழர்?: சீமான் பதில்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel