தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்று முன்னாள் பாஜக தேசிய தலைவரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், இரு கட்சிக்கும் இடையிலான கூட்டணி முறிந்துவிட்டது என்று இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 25) அவர் ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் என்ன நடக்கும் என்று இன்றைக்குச் சொல்ல முடியாது.
கட்சியைப் பலப்படுத்துவது என்பது ஒவ்வொரு நிர்வாகியின் கடமை. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக உரிய நேரத்தில் கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பதிலளிக்கும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
அதிமுக கூட்டணியில் நாம் தமிழர்?: சீமான் பதில்!
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : தேஜஸ்வி யாதவ் கருத்து!