திமுக- அதிமுக இணைப்பா? பெ.சண்முகம் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

CPM Shanmugam

முதல்வர் விஜய் ஆட்சி நீடித்து இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சியானாலும் ஆச்சரியம் இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சோசியல் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பெ.சண்முகம் அளித்த நேர்காணல்: திமுக, அதிமுக இரண்டு கட்சியில அதிமுக திராவிட கட்சியே கட்சியே இல்ல. அந்த வீட்டுல சாவு நடந்தால் அங்கிருந்து அவர்கள் போக மாட்டாங்க. இந்த வீட்டுல கல்யாணம் நடந்தால் அங்கிருந்து இங்க வர மாட்டாங்க. எதிரே திமுககாரர் வந்தால் அதிமுகவைச் சேர்ந்தவர் இன்னொரு பக்கம் போவார்.

ADVERTISEMENT

சித்தாந்த அடிப்படையில் பார்த்தாலும் கூட அதிமுகவையும், திமுகவையும் சமமாக பார்க்க முடியாது. மண் சோறு சாப்பிடுறதுல இருந்து, மொட்டை போடுறதுல இருந்து சகலத்தையும் பண்ணிக்கிட்டு இருந்தது அதிமுக. எம்.ஜி.ஆர் அவர்களின் உடல்நிலை சரியில்லாத போதும் ஜெயலலிதா அவர்கள் சிறையில் இருந்த போதும் சரி, மூட நம்பிக்கையில் மூழ்கிப் போன, பக்தி என்கிற பெயரில் எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் வளர்த்த ஒரு கட்சி அதிமுக.

திராவிட இயக்கத்தினுடைய பழைய விழுமியங்கள், பழைய கொள்கைகள் இவை எல்லாம் அதை எல்லாம் இப்போது அவர்கள் கடைபிடிக்கிறார்களா, நிறைவேற்றுகிறார்களா என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரிய விஷயம். உதாரணமாக, சாதி, சாதிய பாகுபாடு பிரச்சினையை எடுத்துக்கோங்க. நாங்க களத்துல நிற்கிறோம். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக, ஆணவக் கொலைகளுக்கு எதிராக. எந்த திராவிட கட்சிகள் வந்து நிற்கிறது? ஏன் நிற்கவில்லை?

ADVERTISEMENT

பெரியார், சாதியத்துக்கு எதிராக எவ்வளவு வலிமையாக பேசினார். இப்ப இருக்கிற தலைவர்கள் யாராவது பேசுறாங்களா? அதில் அரிப்பு என்பது ஏற்பட்டிருக்கிறது.. சரிவு என்பது ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் அரசியலுக்குள்ள போய் மூழ்கிட்டாங்க. தேர்தல் அரசியல்ல ஓட்டு வாங்கணும்னா, எந்த சாதிக்காரனையும் பகைச்சுக்க கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு அவங்க போயிட்டாங்க.

அதிமுகவும் திமுகவும் சேர்ந்தால் அதைப் பற்றி எங்களுக்கு என்னங்க நஷ்டம் இருக்கு? திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஒரே கட்சியானால், எங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கு? திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது என்பதில தான் நாங்க மாறுபடுறோமே தவிர, அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம்.

ADVERTISEMENT

இந்த புதிய ஒரு ஆட்சி நீடித்து நிலைத்து இருக்கின்ற நிலைமை வந்தால், அதிமுகவும் திமுகவும் ஒன்றாக ஒரே கட்சியானால் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. பல கட்சிகள் இணைக்கப்பட்டிருக்கு, பல கட்சிகள் பிரிஞ்சிருக்கு. அப்படி நடக்காதுன்னு நான் நினைக்கவில்லை. இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share