தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 11ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைமை இன்று (டிசம்பர் 28) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிஇருப்பது கட்சித் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
