மே 4-ல் விஜய் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.. சொல்வது வைகோ

By Mathi

|

Published on 2 May 2026, 3:29 PM

Vaiko ANI Vijay

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்துக்கு வைகோ அளித்த பேட்டியில், தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தருவதில்லை. நான்கு கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன, ஒரு கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சி அமைக்கும் என்று சாதகமாக உள்ளது. மற்றொரு கருத்துக்கணிப்பு விஜய்யின் தவெக TVK ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறது… வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் TVK ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, அது ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடும். நிச்சயமாக அதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடமும், முதல்முறை வாக்காளர்களிடமும் தவெகவுக்கு ஆதரவாக மாற்றம் உள்ளது என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “திராவிட இயக்கம் தியாகங்களின் மீது கட்டமைக்கப்பட்டது… ஆயிரக்கணக்கானோர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளனர்… அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, இது திராவிட மண்ணில் ஒரு நிலையான சக்தியாக இருக்கும். இது ஒரு நிரந்தரமான சக்தி. பாஜக நினைப்பது போல, அவர்களால் திராவிட இயக்கத்தின் அடித்தளத்தை அசைக்க முடியாது.

தமிழ்நாட்டிலும் பாஜக ஊடுருவ முயற்சி செய்கிறார்கள். கேரளாவில், அது மிகவும் கடினமாக இருக்கும். அவர்களால் முடியாது. ஆனால் மேற்கு வங்கத்தில், நிலைமை வேறாக இருக்கலாம்.

ADVERTISEMENT

நாம் பாஜக மற்றும் ஹிந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டும். அந்த இலக்கிற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் அதை எதிர்த்துப் போராடுவோம். இளைய சக்திகளிடையே ஊடுருவ வேண்டும். இளைய சக்தியை, மாணவர் சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும். அதுதான் திராவிட இயக்கத்தின் தேவை” என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel