கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி ஸ்டிர் ஃப்ரை உருளைக்கிழங்கு!
ஆசிய சமையலில் பரவலாக நடைமுறையில் இருக்கும் பிரபலமான சமையல் முறைகளில் ஸ்டீமிங் மற்றும் ஸ்டிர் ஃப்ரைஸ் ஆகியவையும் ஒன்றாகும். அந்த வகையில் நீங்களும் இந்த ஸ்பைசி ஸ்டிர் ஃப்ரை உருளைக்கிழங்கு செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். இதில் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிக கலோரி கொண்டது. உடனடி ஆற்றல் கிடைக்கும். மூளையை நன்கு தூண்டக்கூடிய உணவாக அமையும்.
என்ன தேவை?
உருளைக்கிழங்கு – முக்கால் கப்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம், உப்பு – தலா கால் டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள், கொத்தமல்லி – தேவையான அளவு
தண்ணீர் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை முக்கால் வேக்காட்டில் இறக்கி, தோல் நீக்கி நறுக்க வேண்டும். தவாவில் எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம் சேர்த்துப் பொரியவிட்டு, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதில் இஞ்சி, பச்சைமிளகாய், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பஃப்டு ரைஸ் ஸ்நாக்!
கிச்சன் கீர்த்தனா: கிரில்டு கார்ன்!