விஜய் தொண்டர்களால் வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை நிறுத்தம்- வீடியோ

Published On:

| By Mathi

Velankanni Vijay

வேளாங்கண்ணி தேவாலய திருப்பலி பிரார்த்தனை நிகழ்வின் போது TVK TVK என தவெக தொண்டர்கள் குரல் எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டது. இந்த கூச்சல் குழப்பத்தால் தேவாலய திருப்பலி நிகழ்ச்சி 30 நிமிடம் நிறுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்செந்தூர், சீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி தேவாலயத்தில் விஜய் பிரார்த்தனை செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

ADVERTISEMENT

இதனால் இன்று அதிகாலை முதலே வேளாங்கண்ணி தேவாலயத்தில் விஜய் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். மேலும் தேவாலயத்தில் இன்று பகலில் நடந்த திருப்பலி பிரார்த்தனை நிகழ்விலும் விஜய் கட்சி தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென TVK TVK என தவெக தொண்டர்கள் முழக்கம் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்வு 30 நிமிடம் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share