வைக்கம் நூற்றாண்டு விழா!
சென்னை வர்த்தக மையத்தில் இன்று (டிசம்பர் 28) தமிழக அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று காங்கிரஸ் 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தலைமைச் செயலாளர்களின் மாநாடு!
தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம்கள்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்களை பெற இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
மார்கழியில் மக்களிசை!
சென்னை மயிலாப்பூரில் இன்று மார்கழியில் மக்களிசை கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டம்!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ – ஜியோ இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளது.
மகளிர் கிரிக்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு நாள் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
மழை அப்டேட்!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 585-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று!
தமிழ்நாட்டில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மல்யுத்த கூட்டமைப்பிற்கு தற்காலிக நிர்வாக குழு!
எண்ணூர் வாயு கசிவு: போராட்டத்தை வாபஸ் பெற்ற மக்கள்!
திகாரா? இல்ல தி.நகரா?: அப்டேட் குமாரு
சென்னை – 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!