வைஃபை ஆன் செய்ததும், “நான் அடிச்சா தாங்கமாட்ட… நாலு மாசம் தூங்கமாட்ட…” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்ன ப்ரோ.. செம்ம வைப் மோடுல இருக்கீங்களா?
நேரடியாக விஷயத்துக்கு போயிடுவோமே ப்ரோ… அதிமுகவோட சட்டசபை குழு தலைவரா எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்திருத்தாங்க.. ஆனா எடப்பாடியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவோட சபாநாயகரை சந்திச்சு இருக்கு எஸ்பி வேலுமணி கோஷ்டி.. எஸ்பி வேலுமணியை சட்டசபை குழு தலைவராக நியமிக்கனும்னு 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்துருக்காங்க..
கடந்த சில நாட்களாக அதிமுகவில என்ன நடந்துகிட்டு இருக்குதுன்னு நாம சொல்லிகிட்டு இருக்கிறோம்.. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துல எடப்பாடியை சிவி சண்முகம் அடிக்க பாய்ந்தது; அதை எடப்பாடி தடுக்க முயற்சித்து கை ஓங்கியதுன்னு எல்லாத்தையும் சொன்னோம்..
இன்னைக்கு காலை நிலவரப்படி எஸ்பி வேலுமணி- சண்முகம் கோஷ்டியில 34 அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்தாங்க.. இவங்க அத்தனை பேரும் விஜய்க்கு ஆதரவு தர ரெடி.. அதனால 10 அமைச்சர் பதவி கொடுங்கன்னு ஆதவ் அர்ஜூனா மூலமா பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருந்தாங்கன்னு விரிவாகவே சொல்லி இருந்தோம்..
ஆனால் இன்னைக்கு பகல்ல நிலைமையே வேற மாதிரி ஆகிடுச்சு.. அதிமுகவோட சட்டசபை குழு தலைவரா எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிச்சு தற்காலிக சபாநாயகர், சட்டசபை செயலாளர்கிட்ட கடிதம் கொடுத்தாங்க.. இதுதான் எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் கோஷ்டிக்கு செம்ம ஷாக்..
அதிமுகவோட 47 எம்.எல்.ஏக்களில் வெறும் 17 பேர் எடப்பாடியை ஆதரிச்சதுல என்ன ப்ரோ ஷாக் இருக்கு?
சொல்றேன் ப்ரோ.. எலக்ஷன்ல ஜெயிச்ச அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 47. இதுல 34 பேர், எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் கோஷ்டியில இருந்தாங்க..
பொதுவாக எம்.எல்.ஏக்கள் மொத்த எண்ணிக்கையில 3-ல் 2 பங்கு பேர் ஒரே அணியாக இருந்தா தனி குழுவா இயங்க முடியும்… அவங்க மேல கட்சி தாவல் தடை சட்டம் பாயாது.. எம்.எல்.ஏ. பதவியும் பறி போகாது..
அதிமுகவோட மொத்த எம்.எல்.ஏக்கள் 47 .. இதுல 3-ல் 2 பங்குன்னா 32 எம்.எல்.ஏக்கள்.. ஆனா எஸ்பி வேலுமணிகிட்ட 34 எம்.எல்.ஏக்கள் இருந்தாங்க.. அதனால தகுதி நீக்கம், கட்சி தாவல் தடை சட்டம் , பதவி பறிப்பு எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
இதை வெச்சுகிட்டுதான் அந்த கோஷ்டி விஜய் டீம்கிட்ட ‘உங்களுக்கு நாங்க மொத்தமா ஆதரவு தர்றோம்.. எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்க’ன்னு கெத்தா பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருந்துச்சு..
அதோட விஜய் பதவியேற்புக்கு வந்த சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீலான அபிஷேக் மனு சிங்வியையும் எஸ்பி வேலுமணி டீம் சந்திச்சு லீகல் ஒப்பீனியனையும் கேட்டுச்சு…
இந்த அபிஷேக் மனு சிங்வி சீனியர் காங்கிரஸ் எம்.பி. விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காம டிலே ஆனப்ப சுப்ரீம்கோர்ட்டுக்கு போகலாம்னு ஸ்டிராங்கா அட்வைஸ் செஞ்சவர் நேத்து விஜய்யையும் சந்திச்சுட்டு போனாரு.. அவர்கிட்டதான் எஸ்பி வேலுமணி டீம் லீகல் பிராப்ளம் பத்தி கிளாரிபிகேஷன் கேட்டிருந்துச்சு..
இப்ப 17 எம்.எல்.ஏக்கள் எடப்பாடியை ஆதரிக்கிறாங்கன்னு உறுதியாகிடுச்சு.. அதனால எஸ்பி வேலுமணி கேம்ப்பில் மொத்தமே 30 எம்.எல்.ஏக்கள்தான் இருக்காங்க.. அதாவது 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏக்கள் எஸ்பி வேலுமணி கோஷ்டியில இல்லை.. 4 எம். எல்.ஏக்கள் எடப்பாடி பக்கம் ஜம்ப் ஆகிட்டாங்கன்னு உறுதி ஆகிடுச்சு..
ஓ அப்படி ஒரு கணக்கு வருதா.. சரி.. இனி என்னதான் நடக்கும் ப்ரோ?
எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் கோஷ்டியில 3-ல் 2 பங்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் இல்லைங்கிறதால அந்த கோஷ்டி எடப்பாடி டீமுக்கு போன எம்.எல்.ஏக்களை மறுபடியும் தூக்க முயற்சிக்கும்..
விஜய்யைப் பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் ஆதரவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கு..
அதாவது எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் கோஷ்டிக்கு செம்ம செக் வைத்துட்டார் எடப்பாடிங்கிறதுதான் நிலைமை..
ஆனா இதே நிலைமை நீடிக்குமா?ன்னும் சொல்ல முடியாது.. இங்கிட்டும் அங்கிட்டும் ஜம்ப் ஆகுறது எல்லாம் அரசியல் சகஜம்தானே ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
