வைஃபை ஆன் செய்ததும், “நினைப்பது எல்லாம் நடந்துவிடுமோ”ன்னு சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. சிஎம் விஜய் அவரு வேலையை தொடங்கிட்டாரா?
ஆமாய்யா.. சிஎம் செக்கரெட்டரியேட் போய் அவரு வேலையை தொடங்கிட்டாரு..
அதிமுகவுலதான் பிரச்சனை ஓயவே இல்லை.. இப்ப அதிமுகவில அடிக்கிற புயல் எல்லாம் சிவி சண்முகத்தை மையமா வெச்சுதான் இருக்கு..
நேத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துல நடந்த அடிதடி பத்தி சொன்னேன்ல.. அந்த கூட்டம் கலைஞ்ச உடனே அங்கே இருந்து எல்லாருமே கிளம்பி.. சிவி சண்முகம் வீட்டுல போய் அசெம்பிள் ஆனாங்க.. அங்கே எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர்.. அவங்க ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருந்தாங்க…
அங்க நடந்த டிஸ்கஷன்ல, “ஒவ்வொரு எலக்ஷனிலும் எடப்பாடியால தோத்துகிட்டே இருக்கோம்.. இனி எடப்பாடியை ஒதுக்கி வெச்சுட வேண்டியதுதான்..”ன்னு பேசினாங்க..
அதுக்கு பிறகு, “நாமும் அதிகாரத்துல இருக்கிறதுதான் நம்ம எல்லாருக்குமே நல்லது.. இப்ப இருக்கிற நிலைமையில நாம விஜய்யை ஆதரிப்போம்.. “ன்னு சொல்லிட்டே விஜய்க்கு ஆதரவு தரக் கூடிய லெட்டர்ஸ்ல எம்.எல்.ஏக்கள் கிட்ட கையெழுத்தும் வாங்கினாங்க.. மொத்தம் 34 பேர் விஜய்க்கு ஆதரவு தர்றோம்னு கையெழுத்து போட்டாங்க..
அதுக்கு பிறகு, ”34 எம்.எல்.ஏக்கள் மொத்தமா விஜய்யை ஆதரிப்போம்.. 5 அமைச்சர் பதவி கேட்போம்”னு பேசிகிட்டு இருக்கும் போது லீமா ரோஸ், “நான் ஆதவ் அர்ஜூனாகிட்ட பேசுறேன்”ன்னு சொல்லிட்டு நிலவரத்தை ஷேர் செஞ்சாங்க..
அங்கிட்டு பேசுன ஆதவ் அர்ஜூனாவும் சரின்னு சொல்லிட்டு, “ஆதரவு லெட்டர்ஸோட வாங்க”ன்னு சொன்னாரு…
சிவி சண்முகம் ,எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் மூணு பேரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு லெட்டரோட விஜய்யை பார்க்க போனாங்க..
விஜய் அங்கதான் இருந்தாரு.. ஆனாலும் இவங்களை சந்திக்காம புஸ்ஸி ஆனந்த்கிட்ட பேச சொல்லிட்டாரு..
புஸ்ஸி ஆனந்தை பார்த்து அதிமுகவோட மூவரணி, ”நாங்க 34 பேர் ஆதரவு தர ரெடியா இருக்கோம்.. 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுங்க”ன்னு பேசினாங்க..
ஆனா புஸ்ஸி ஆனந்தோ, விஜய்க்கு மெஜாரிட்டி கிடைச்சுட்டதால என்னவோ இந்த விஷயத்தை சீரியஸாவே எடுத்துக்காம பேசிகிட்டு இருந்தாராம்.. அதாவது ரொம்ப ஆர்வம் காட்டலையாம்.. அதிமுகவின் மூவரணியும் அங்கிருந்து கிளம்பிடுச்சு..
இந்த தகவல் எல்லாம் எடப்பாடிக்கு போக.. அய்யயோ.. முதலுக்கே மோசமாகுதே.. கட்சியே கையை விட்டு போகுதேன்னு மறுபடியும் திருமா லைனுக்கு போனார்… திருமாகிட்ட, “தம்பி.. நீங்க சிஎம் ஆக இருங்க.. நாங்க சப்போர்ட் பண்றோம்”னு திரும்பவும் ஆரம்பிச்சிருக்காரு..
ஆனா திருமாவோ, “அண்ணே..விஜய்க்கு ஆதரவு லெட்டர் எல்லாம் கொடுத்துவிட்டாச்சே”ன்னு சொல்லிட்டாரு..
இன்னைக்கு விடிஞ்சது முதலே இந்த பஞ்சாயத்து தொடருது.. இன்னைக்கு காலையில இருந்து சிவி சண்முகம் வீட்டுல ஒரு குரூப்பும் எடப்பாடி வீட்டுல ஒரு குரூப்பும் டிஸ்கஷன் செஞ்சுகிட்டு இருக்காங்க..
அதோட சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் டீம் முதல்வராக பதவியேத்துகிட்ட விஜய்யை சந்திக்கவும் முயற்சி செஞ்சுகிட்டே இருக்காங்க…
இந்த அணியில இருக்கும் லீமா ரோஸ், அமைச்சராகிவிட்ட மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு போன் போட்டுக் கொடுக்க சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் மூணு பேருமே அவர்கிட்ட பேசினாங்க..
அப்ப, “நாங்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுக்க ரெடியாக இருக்கிறோம்.. லெட்டர்ஸும் கையிலதான் இருக்கு..
இப்ப திமுக கூட்டணி கட்சிகளால்தான் சிஎம் ஆட்சி அமைச்சு இருக்கிறார்னு சொல்றாங்க இல்லையா? திமுக கூட்டணி கட்சிகளை நீங்க ரொம்ப காலம் நம்பவும் முடியாது.. அவங்க எப்ப வேணும்னாலும் ஆதரவை வாபஸ் வாங்கிடுவாங்க..
அதனால எங்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவுங்கிறதுங்கிறது சிஎம்-க்கு ரொம்பவே சப்போர்ட்டா இருக்கும்.. எங்க 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுங்க.. சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில நாங்க கவர்மெண்ட்டுக்கு ஆதரவா ஓட்டுப் போடுவோம்.. அதனால சிஎம் விஜய்யை பார்க்கனும்னு” சொல்லி இருக்காங்க..
ஆதவ் அர்ஜூனாவோ , “சரிங்கண்ணே.. நான் பேசிட்டு சொல்றேன்.. கொஞ்சம் பொறுமையாக இருங்கண்ணே”ன்னு ரொம்பவே பவ்யமாகவே சொல்லி இருக்கிறார்..
அதிமுகவில கலகக் குரல் எழுப்புற லீடர்ஸ்கிட்ட பேசுனப்ப, “இப்பதாங்க கலகமே ஆரம்பிச்சுருக்கு.. மே 13-ந் தேதி சட்டசபையில நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போகுதுல்ல.. அன்னைக்குதான் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகப் போகுதுங்க”ன்னு சஸ்பென்ஸ் வைக்கிறாங்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
