டிஜிட்டல் திண்ணை: விஜய் க்ரீன் சிக்னல் தருவாரா? பதைபதைப்பில் எஸ்பி வேலுமணி, சி.வி சண்முகம்

Published On:

| By Mathi

Digital Thinnai AIADMK

வைஃபை ஆன் செய்ததும், “கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது காதிலே கேட்டதும் கதை போல் ஆனது”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது..

என்னய்யா.. பழைய பாட்டு.. ஏதும் விஷேசமா?

நமக்கு எதுக்குய்யா விஷேசம்.. இன்னைக்கு விஜய் முதல்வரான பின்னர் முதல் முறையா சட்டசபை கூடுச்சு.. சில பல சுவாரசியங்களுடன் எம்.எல்.ஏக்கள் பதவியேத்துகிட்டாங்க..

ADVERTISEMENT

ஆனாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் பதற்றமாவே இருந்தாங்க.. சட்டசபைக்குள்ள வரும்போதே எடப்பாடி கோஷ்டி தனியா, எஸ்பி வேலுமணி கோஷ்டி தனியாதான் வந்தாங்க..

பதவியேற்கும் போதும் கூட எடப்பாடிக்கு கொஞ்சமாதான் ’மேஜை தட்டு’ கிடைச்சது.. எஸ்பி வேலுமணிக்கு ‘அமோகமா’ இருந்தது..

ADVERTISEMENT

ஆக.. இப்ப என்ன சொல்ல வர்றீரு?

நாம ரெண்டு நாளா சொல்லிகிட்டு இருக்கிறதுதான் சட்டசபையிலேயும் நடந்துகிட்டு இருக்குதுன்னு சொல்றேன்..

அதிமுகவில எடப்பாடி கோஷ்டி, சி.வி சண்முகம்-எஸ்பி வேலுமணி கோஷ்டின்னு பிரிஞ்சுட்டாங்க.. சிவிஎஸ் கோஷ்டியின் 34 எம்.எல்.ஏக்கள் சிஎம் விஜய்க்கு சப்போர்ட் பண்ண ரெடியா இருக்காங்கன்னும் நாம சொல்லி இருந்தோம் இல்லையா?… என்னதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு லெட்டரோடு காத்திருந்தாலுமே சிஎம் விஜய்கிட்ட இருந்து எந்த சிக்னலுமே வரலையாம்..

ADVERTISEMENT

இதை பத்தி அதிமுக சீனியர்கள் சிலர்கிட்ட பேசுனப்ப, ”சி.வி சண்முகம் -எஸ்பி வேலுமணி டீமில் இருக்கும் லீமா ரோஸ்தான் இப்போதைக்கு தவெகவுக்கு கனெக்‌ஷன் பாயிண்ட்டா இருக்காங்க.. லீமா ரோஸின் மருமகன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மூலம்தான் அத்தனை மூவ்ஸும் நடந்துகிட்டு இருக்கு”ன்னு சொல்றாங்க.” என்றனர்.

சரி.. தவெக சைடுல விசாரிச்சீரா?

ஆமாய்யா.. விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “மே 9-ந் தேதியில் இருந்தே அதிமுக எம்.எல்.ஏக்கள் டீம் பேசிகிட்டுதான் இருக்காங்க.. ஆதவ் அர்ஜூனா லிங்க் மூலமாக விஷ்ணு ரெட்டி, புஸ்ஸி ஆனந்த் ரெண்டு பேரும் இந்த மேட்டரை டீல் செய்யுறாங்க..

அதிமுக சைடுல முதல்ல 10 அமைச்சர்கள் கேட்டாங்க.. ஆனா விஷ்ணு ரெட்டியும் புஸ்ஸி ஆனந்தும் “அதெல்லாம் முடியாது”ன்னு திட்டவட்டமா சொன்னாங்க.. அதுக்கு அப்புறமா நடந்த பேச்சுவார்த்தையில 5 பேருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் கொடுக்கனும்னு அதிமுக டீம் டிமாண்ட் செஞ்சது.. இப்போதைக்கு சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர்னு டீம் லீடர்ஸுக்கு மட்டும் மினிஸ்டர் போஸ்ட் தரலாம்னு யோசிக்கிறாங்க..

ஆனா ஜான் ஆரோக்கியசாமி இதுக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. அதிமுகவோட சப்போர்ட்டே நமக்கு வேணாம்னு சொல்றார். ஏன்னு கேட்டதுக்கு, “நம்மகிட்ட வர்ற அதிமுக டீமை லீட் செய்யுற 4 பேர் மீதும் கேஸ்கள் இருக்கு.. நாம அவங்களை கூப்பிட்டு அமைச்சர் பதவி கொடுத்தா டெல்லி செம்ம கோபமாகிடும்.. ஆளுநர் மாளிகையில அவங்க மேல விசாரணை நடத்த அனுமதிக்கிற ஃபைல்ஸ்க்கு ஓகே சொல்லிட்டா ரொம்ப சிக்கலாகிடும்.. அப்புறமா அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாமே உள்ள வரும்.. அதோட, அதிமுக லீடர்ஸை ஆட்சிக்கு உள்ள விட்டா சும்மாவும் இருக்கமாட்டாங்க.. விஜய் சார்க்கு க்ளீன் இமேஜ் இருக்கு.. அது ரொம்பவே டேமேஜ் ஆகிப் போயிடும்.. அதனால அதிமுக டீம் ஆதரவு இல்லாமலேயே சமாளிச்சு பார்ப்போம்”னு சொல்றாராம்..

இதுக்கு விஷ்ணு ரெட்டி- புஸ்ஸி ஆனந்த் அண்ட் கோ, “நமக்கு என்னதான் சிபிஐ-சிபிஎம்-விசிக- முஸ்லிம் லீக் ஆதரவு கொடுத்தாலும் எவ்வளவு காலத்துக்குன்னு கேள்வி இருக்கதானே செய்யுது.. முதல் நாளே வந்தே மாதரம், தமிழ்த் தாய் பாட்டு சர்ச்சையில நமக்கு எதிரா பேசுறாங்க. .. திமுக கவர்மெண்ட்டை ஏன் குறை சொல்லனும்னு திருமா கேள்வி கேட்கிறாரு.. இந்த மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிகிட்டே இருப்பாங்க.. அப்புறமா திடீர்னு ஆதரவை வாபஸ் வாங்கிட்டு போயிடுவாங்க.. நம்ம ஆட்சிக்கு இவங்களால எந்த நேரத்துலயும் ஆபத்து வரும்.. அதுக்குதான் பாதுகாப்பா அதிமுக டீம் ஆதரவை வாங்கி வெச்சுக்குவோம்.. கெட்டதுதான்.. நல்லதும் இருக்குதுதானே”ன்னு சொல்றாங்க..

மூவ் பண்ண வேண்டிய அளவுக்கு அதிமுக டீம் முயற்சி பண்ணிடுச்சு.. தவெக டீம்களும் ஒப்பீனியன்களை சொல்லிடுச்சு.. இப்போதைக்கு சிஎம் விஜய் என்ன முடிவு எடுப்பாருன்னுதான் அதிமுக- தவெக டீம்கள் சஸ்பென்ஸுடன் வெயிட் பண்றாங்கய்யான்னு டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share