டிஜிட்டல் திண்ணை: விஜய் பாணியில் அரசியலில் தனுஷ்.. 2029-ல் கடைசி படம்- வெற்றி மாறன் இயக்கம்!

Published On:

| By Minnambalam Desk

Dhanush steps into politics following Vijay? Final film in 2029

வைஃபை ஆன் செய்ததும், “நான் பறக்குற நேரம் இதுடா! எங்க இருக்கு நீ தேடி வாரேண்டா” என்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த தனுஷ் படத்தோட பாட்டுடன் வர்றீங்க?

ஆமாங்க ப்ரோ.. தனுஷ் படம் வந்து 10 வருஷம் இருக்கலாம்.. ஆனா தனுஷ் இப்பதான் களத்துல இறங்குறாரு..

ADVERTISEMENT

அப்ப தனுஷ் அரசியலுக்கு வர்றது உறுதியாங்க ப்ரோ?

தனுஷ் ரசிகர் மன்றங்கள், “அனைத்திந்திய நண்பர்கள் நற்பணி மன்றம்” அப்படிங்கிற பெயரில செயல்படுது.. போன மாசம் கூட இந்த மன்றத்துக்கு தனுஷ் கொடியை அறிமுகப்படுத்தி இருந்தார்..

இப்ப கோவை மாவட்டத்துல 10 சட்டசபை தொகுதிகளில் ‘தனுஷ் நண்பர் நற்பணி இயக்கம்’ தொடங்கவும் உறுப்பினர்களை சேர்க்கவும் ஆரம்பிச்சிருக்காங்க.. அதனாலதான் தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதின்னு சொல்றாங்க ப்ரோ..

ADVERTISEMENT

இதை பத்தி தனுஷ் சர்க்கிளில் நாம விசாரிச்சப்ப, “தனுஷ் இன்னும் 3 வருஷம்தான் சினிமாவில நடிப்பாரு.. 2029-ல் அவரோட கடைசிப் படம். அந்த படத்தை இயக்குநர் வெற்றி மாறனுக்கு கமிட் பண்ணியிருக்கிறாரு..

விஜய் எப்படி ஜனநாயகன் படத்தை கடைசி படம்னு அறிவிச்சுட்டு அரசியலுக்கு வந்தாரே அதே பாணியில்தான் தனுஷும் சினிமாவில நடிக்கிறதை நிறுத்திட்டு அரசியலுக்கு வருகிறார்.

ADVERTISEMENT

தனுஷ் அரசியலுக்கு வரனும்னு முடிவெடுத்ததுக்கு காரணமே ரஜினி ஃபேக்டர்தான். ரஜினி சார் மேல இயல்பிலேயே ரொம்பவே மரியாதை வெச்சிருப்பவர் தனுஷ். அவர் மகளையே திருமணம் செய்தாரு..

தனுஷ் தன்னோட குடும்பத்து மேல.. அப்பா, அம்மா, தங்கை, அண்ணன் அவங்க எல்லாரும் மேல… குடும்பத்துல மேல ரொம்பவே பாசமா இருக்கிறவர்..

தனுஷ் பேமிலியில திடீர்னு பிரச்சனை ஏன் வந்ததுன்னா.. அவருடைய மகனை ரஜினி வீட்டில்தான் அதிகம் வெச்சுக்கிறாங்க.. தனுஷ் மனைவியும் மாமியார் லதா ரஜினிகாந்தும் மகனை அங்கேயே வெச்சுகிட்டு தனுஷ் அப்பா- அம்மாவை பார்க்க அதிகமா அனுப்புறது இல்லை.. இதுல தொடங்கிய ‘பஞ்சாயத்து’தான் விவகாரத்து வரைக்கும் போயிருச்சு..

ஆனாலும் தனுஷுக்கு ரஜினி மேல மரியாதை கொஞ்சமும் குறையலை.. பாசமும் குறையலை..

விஜய் மேலதான் தனுஷ் ரொம்பவே வருத்தத்துலதான் இருக்கிறாரு..

விஜய் மேல தனுஷுக்கு என்ன கோபம்னா, கடந்த சில வருஷங்களாக விஜய் ரசிகர்கள், ரஜினியை ரொம்பவே காயப்படுத்திட்டு இருக்காங்க.. எலக்‌ஷனுக்கு முன்னாடி இப்ப அமைச்சரா இருக்கிற ஆதவ் அர்ஜூனா, ”ரஜினிகாந்துக்கு திமுக மிரட்டல்களை கொடுத்தது”ன்னு சொல்லி இருந்தாரு.. அதுக்கு ரஜினிகாந்த், மறுப்பு அறிக்கை கொடுத்ததோட, “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”ன்னு சொல்லி இருந்தாரு..

இந்த மாதிரி ரஜினிகாந்தை விஜய் ரசிகர்கள், தவெக கட்சிக்காரங்க அவமானப்படுத்தறப்ப விஜய் அதை கண்டிக்கவே இல்லைன்னு தனுஷுக்கு ரொம்பவே கோபம் அதிகம்..

இருந்தாலும், மே 4-ந் தேதி எலக்‌ஷன் ரிசல்ட் வந்த அன்னைக்கே தன்னோட எக்ஸ் பக்கத்துல, ”விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்”ன்னு தனுஷ் பதிவிட்டிருந்தார்.

ஆனாலும் கூட ரஜினிகாந்துக்காக விஜய்-க்கு ‘கவுண்ட்டர்’ கொடுக்கனும்னு சொல்லிதான் அரசியல் களத்துக்கு தனுஷ் வருகிறார்.. அதுக்கான களப் பணிகள்தான் இப்ப தொடங்கப்பட்டுருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ..

தனுஷுக்கு செல்வாக்கு எப்படி இருக்கும் ப்ரோ?

இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “தனுஷ் பேஸிக்கா நாயுடு சமூகம்னு சொல்றாங்க.. உழைக்கிற மக்கள் அதிகமாக தனுஷ் ரசிகர்களாக இருக்கிறாங்க.. அதோட விஜய் பக்கம் போகாம இருக்கிற ஒரு செக்‌ஷன் தனுஷ் அரசியலுக்கு வரும் போது ஆதரிக்கவும் செய்யலாம்.. ஏன் விஜய் பக்கம் போனவங்க கூட தனுஷ் பக்கம் வர்றதுக்கும் சான்ஸ் இருக்குன்னு கணக்கு போடுறாங்க” ப்ரோ..

சரிங்க ப்ரோ.. தனுஷுக்கு பின்னணியில் திமுகதான், உதயநிதிதான் இருக்கிறாருன்னு சொல்றாங்களே.. உண்மையாங்க ப்ரோ?

இதை பத்தியும் நாம திமுக சைடுலேயும் தனுஷ் பக்கமும் விசாரிச்சதுல, “தனுஷுக்கு நேரடியாக ஆதரவுன்னு இல்லாம ‘வாழ்த்து தெரிவிக்கலாம்’ அப்படிங்கிற நிலையில திமுக இருக்குதாம்.. இன்னொரு பக்கம், “நீங்க அரசியலில் தைரியமா இறங்குங்க.. பார்த்துக்கலாம்”னு உதயநிதி தரப்பில் இருந்து தனுஷுக்கு மெசேஜ் போனதாகவும் சொல்லப்படுதுங்க ப்ரோ” என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share