கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை நடிகர் தனுஷ் தொடங்கி உள்ளார்.

தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற அனைத்திந்திய தலைவர் சுப்ரமணியம் சிவா, அனைத்திந்திய செயலர் ராஜா ஆகியோர் கடந்த 8-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில்,
- கோவை வடக்கு தொகுதி
- கோவை கவுண்டம்பாளையம் தொகுதி
- கோவை சிங்காநல்லூர் தொகுதி
- கோவை சூலூர் தொகுதி
- கோவை மேட்டுப்பாளையம் தொகுதி
மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு உட்பட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர் சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவர் G. சங்கரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதேபோல
- கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி
- தொண்டாமுத்தூர் தொகுதி
- கிணத்துகடவு தொகுதி
- பொள்ளாச்சி தொகுதி
- வால்பாறை தொகுதி
ஆகியவற்றில் இயக்கம் தொடங்க, உறுப்பினர் சேர்க்கைக்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சதீஸ்குமாரை தொடர்பு கொள்ள வேண்டும். தனுஷ் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
