தனுஷ் அரசியலில் இறங்கிட்டா.. திமுக- அதிமுக இருக்காது.. ’கணிப்பது’ விஜய் ஆஸ்தான ஜோதிடர்!

Published On:

| By Mathi

If Dhanush enters politics, DMK and ADMK won't exist- Vijay's Astrologer

2031 சட்டசபை தேர்தலில் நடிகர் தனுஷ் களமிறங்கினால் திமுக, அதிமுக கட்சிகளே இருக்காது என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

கலாட்டா ஊடக விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரதன் பண்டிட் வெற்றிவேல் பேசியதாவது: நான் இப்ப சொல்றேன், என்ன பொறுத்தவரைக்கும் மே பி தனுஷ் கமிட் ஆயிட்டாருன்னு வச்சுக்கோங்க பாலிடிக்ஸ்க்கு… பின்னாடி டிஎம்கே, ஏடிஎம்கே இருக்காது, அந்த நம்பர் டூ பிளேஸ்க்கு தனுஷ் வந்துருவாரு.

ADVERTISEMENT

ஒரு கட்டத்துல விஜய் சார் வெர்சஸும் தனுஷ் சாரும் இது மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அது தனுஷ் சார் முடிவு செய்யனும். அவர் ஜாதகத்துல அந்த யோகம் இருக்கான்னா நான் பர்சனலா பார்த்திருக்கேன். அவரு ஜாதகம் என்னான்னு எனக்கு தெரியும் ஆக்சுவலா.. உறுதியாக இன்னொரு அதிர்ஷடமிகு ஆள்.. இதுல அனுபவம் இருக்கா?அறிவு இருக்கான்னா ஹெல்ப் செய்ய அனுபவம் அறிவும் தேவை இல்லை.

உதவி செய்ற மனசு இருந்தா போதும். இப்ப தளபதி வந்து பட்டாசு கிளப்புறாரு.. பியூட்டிபுல்லா பண்றாரா? இப்ப எங்காவது ரிஜிஸ்டர் ஆபீஸில் லஞ்சம் வாங்க முடியுமா? ஒரு தாசில்தார் போல்டா லஞ்சம் வாங்குறது முடியுமா? சோ கேள்விபட்டா தூக்கி எறிகிறோம் இல்லையா? டெத் சர்டிபிகேட்டுக்கு பணம் கொடுத்தாதான் வாங்க முடிஞ்சது, அது மாறுச்சா இல்லையா இப்போ? இன்னும் நிறைய மாறும்.

ADVERTISEMENT

ஆக மாறுதல் செய்வதற்கு ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் போதுமானது.. அரசியல் அனுபவம் தேவையே இல்லை, நல்ல மனசு இருந்தா போதும். ரிஸ்க் எடுக்க தனுஷ் சார் தயாரா இருந்தா 2031ல இது விஜய் சார் வெர்சஸ் தனுஷ் சார்ன்னு மாறும். இவ்வாறு ரதன் பண்டிட் வெற்றிவேல் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share