நடிகர் தனுஷ் இன்று (ஜூலை 28) தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2002ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் தனுஷுக்கு ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு தேசிய விருதும், அவர் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று 43ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே ஏராளமான தனுஷ் நடிகர்கள் கூடினர். தொடர்ந்து தனுஷுக்கு வாழ்த்து கூறியவாறு உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.
இந்தசூழலில் வீட்டின் பால்கனியில் வந்து நின்று ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட தனுஷ், கீழே இறங்கி வந்தார். அவருக்கு ராட்சத மாலை அணிவித்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார் தனுஷ்.
சமீபநாட்களாக தனுஷ் ரசிகர்கள் நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று திருவள்ளூரில் நடந்த தனது பிறந்தநாள் விழாவில் பேசிய தனுஷ், ”உங்களைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களில் ஒருவராக இருங்கள்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முன்னதாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு இதேபோன்று ரசிகர்கள் குவிந்து வாழ்த்து தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
