நடிகை அம்பிகா மீது ரூ.46 கோடி பண மோசடி செய்ய முயற்சி செய்ததாக அவரது சகோதரியான நடிகை ராதா சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த அம்பிகா, ராதா இருவரும் சகோதரிகள். இருவருக்கும் இடையே குடும்ப சொத்துகள் தொடர்பான பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரூ.46 கோடி பண மோசடி செய்ய முயற்சித்ததாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சகோதரி நடிகை அம்பிகா, சகோதரர் மல்லிகார்ஜூன் மீது நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
