விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, அட்லி படித்த சத்யபாமா கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லி பேசியதாவது: இப்ப போட்டுருக்க சட்டை, பேண்ட், வாட்ச் இதெல்லாம் என் உழைப்பில கிடைச்சதுன்னு நான் நினைச்சாலும், என் அண்ணன், என் தளபதி இல்லன்னா (முதல்வர் விஜய்) சான்ஸே கிடையாது. சான்ஸே கிடையாது. சான்ஸே கிடையாது.
நான் ‘ராஜா ராணி’ பண்ணி… ஒரு ‘ராஜா ராணி’ பண்ணி நான் வந்து ஒரு நல்ல… I was famous. I know, with God’s blessing, with my parents’ blessing, with my wife’s blessing, I was good.
But that man gave me back to back, back to back.
And when Shah Rukh sir came to my office meeting, அப்போ வந்து சொன்னாரு, ‘டேய் என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன்னு தெரியாது. என் கால சுத்தி சுத்தி வராத. அந்தப் படத்தை தயவு செஞ்சு பண்ணு. உன் வாழ்க்கை மாறிடும்’னாரு.
மாறுச்சு.
I’m so happy and thankful to Vijay anna.
இது நான் சும்மா மேடைக்கு மேடை விஜய் அண்ணன சொல்றேன் அப்படில்லாம் நினைக்காதீங்க. இன்னொரு படம் கொடுப்பாருன்னு… இன்னொரு படம்ல்லாம் அவர் கொடுக்க மாட்டாரு. அவர் சிஎம் ஆயிட்டாரு.
So இருந்தாலும் நம்ம அண்ணன் நம்ம அண்ணன்தான்.
Recent times everyone observe something
ஊர்வாய அடக்க முடியாது. ஆனா ஊர்வாயில விழுந்து நம்ம நம்பி வாழ்ந்துட்டுப் போறது வந்து ஒரு முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும்.
எவன் என்ன சொல்றான்னு கேட்காத. நீ ஊருக்குப் போனுமா? போய்க்கிட்டே இரு..
நம்மதான்… நம்மதான் அடுத்து next generation.
இந்த social media-ல இவரு, அவரு, அவரு, அவரு சொல்றாரு… இவரு, இவ… அதெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லணும்னா நேரா சொல்லிக்கலாம்.

We have to be very clear. We have to be very honest.
நான் இன்னொன்னு சொல்றேன்.
Next generation politics-ல solid-ஆ இருக்கும். அதுக்கு ஒரே காரணம் விஜய் அண்ணன்தான்.
எத்தனை பேருக்கு…
எப்பா, நான் அரசியல் பேசல. நான் அரசியல் ஆளும் கிடையாது. நான் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமும் கிடையாது. Okay?
ஆனா ஒன்னு சொல்றேன். ஒன்னு சொல்றேன்.
எனக்கு முந்தின generation-ல நான் இருந்திருக்கேன். நான் ரொம்ப பெருசா தலைமை செயலகம்… அது என்ன நடக்கறது… அது பேர் என்ன சொல்லுவாங்க… சட்டசபை… சட்டசபையில என்ன நடக்குதுன்னு அஞ்சு வயசு குழந்தை கால்ல உட்காந்து பாக்குதுன்ற data முதற்கொண்டு தெரியுது.
So I think Vijay anna is carrying generation…
இனிமே யாராச்சும் ஒருத்தர்… அது ஒரு… அது ஒரு தப்பான ஒரு கருத்துதான். அரசியல் நம்மளுக்கானது இல்லைன்னு சொல்லுவாங்க. அப்படில்லாம் ஒன்னும் கிடையாது. அரசியல் நம்மளுக்கானது. It is for us.
How we have… on what level… is with us. No one influence us. We know what to do and we will just do what is right for the society and we keep doing it.
And coming back to ‘பத்தா’… commercial. It is going to entertain you. Trust me.
ஒரு அண்ணனா சொல்றேன், தயவு செஞ்சு போய் பாருங்க. Climax-ல உங்க அப்பாவை நினைச்சு நீங்க அழுவீங்க.
இந்த மாதிரி ஒரு படம் இன்னொரு தடவை எப்ப பாலாஜி அண்ணன் கொடுப்பாருன்னு அவருக்கு ஒரு tweet-யோ ஒரு love-வோ போடுவீங்க.
Ignore negativity. தலைவன் சொன்னது. அதை follow பண்ணுங்க. Ignore negativity.” இவ்வாறு அட்லி பேசினார்.
அட்லியை விளாசும் நெட்டிசன்ஸ்
அட்லியின் இந்தப் பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் ஆதரவும் விமர்சனமும் பதிவாகி வருகிறது. குறிப்பாக அவரது ‘Next generation politics’, ‘தலைமை செயலகம்… சட்டசபை’ உள்ளிட்ட பேச்சுகளை முன்வைத்து சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள் பின்வருமாறு
@Jaisajoints: அட்லி : அதாவது நான் அரசியல் வாதி இல்ல…ப்ளா..ப்ளா…
@Atlee_dir எப்பா ராசா நீ ஊதவே வேணாம்…
@Admk_Tweets: அட்லி Direct பண்ணினது 4 குப்பை படம் இந்த லட்சணத்துல Next Gen Politics பத்தி பேச வந்துட்டார்
@jaya2016maha: தன்னை எதிர்ப்பவர்களை பழிவாங்க துடிக்கும் முதல்வர் விஜய் & தவெக ? அட்லி காப்பி அடிக்கும் அரசியல் கதை !!
