பிஸ்லெரி மினரல் வாட்டர் அல்லாத பாட்டில் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது- வழக்குத் தொடர FSSAI அனுமதி!

By Mathi

|

Published on 23 Nov 2026, 1:52 AM

பிஸ்லெரி- குடிநீர்

பிரபல பிஸ்லெரி (BISLERI) நிறுவனத்தின் மினரல் வாட்டர் அல்லாத, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி, இரண்டு ஆய்வகப் பரிசோதனைகளிலும் பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குடிநீர் மாதிரியில் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று (நவம்பர் 22) இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வளாகத்திலிருந்து மினரல் வாட்டர் அல்லாத, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குடிநீர் மாதிரியில் புரோமேட் (Bromate) என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது என்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் அந்தக் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

ADVERTISEMENT

இதையடுத்து குடிநீர் மாதிரி மேலாய்வுக்காக மற்றொரு உணவுப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (Polycyclic Aromatic Hydrocarbons – PAHs) என்ற ரசாயனங்கள் கண்டறியப்பட்டன. இதன் காரணமாக இரண்டாவது ஆய்வகமும் அந்தக் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவித்தது.

இரண்டு ஆய்வகங்களின் முடிவுகளும் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் அடிப்படையில் பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு FSSAI தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel