இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

amudu
கறிக்கடை, காய்கறி கடைக்கு சென்று வந்த கணவர்கள், மனைவிகளிடம் திட்டு வாங்காமல் இருந்ததாக சரித்திரமே இல்லை.

mohanram.ko
கோயில் இல்லாத ஊரில் கூட குடி இருக்கலாம்…. ஆனா ‘நெட்வொர்க்’ இல்லாத ஏரியாவில் குடியிருக்க கூடாது…

Mannar & company
எல்லாத்தையும் தாங்கிக்கிட்டே
இருந்தா
ஒருநாள் இதயமே கேக்கும்,
“நான் பொறுமையா இருக்கேனா..
இல்ல முட்டாளா இருக்கேனா?

ச ப் பா ணி
ஒவ்வொரு சம்பவத்துக்கும் மூன்று முகங்கள் உண்டு….
உங்களுக்கு தெரிந்தது
பிறருக்கு தெரிந்தது
உண்மையில் நடந்து…

mohanram.ko
மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி…
டேய் அது VIP போற வழி டா ….அந்த வழியில மக்களை விட மாட்டாங்க…

அண்ணாச்சி
” வீ தி லீடர்ஸ் ”
20 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை
-அடுத்து… PM… or… CM..!?

பரமசிவம் ராமசாமி
நம்மைச் சுற்றி உள்ளவங்க ரெண்டே வகைதான்!!!
“இவனுக்கு எதாவது பண்ணணும்”!!!
-இவனை ஏதாவது பண்ணணும்..!!??

படிக்காதவன்
அக்கவுண்ட்ல போட்ட சம்பள பணம் யூபிஐ வழியாக போயிடுது
மொத்த கதவையும் திறந்துவிட்ட மாதிரி…
லாக் ஆஃப்
