சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. dc easy win over srh by 7 wickets
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ரெட்டி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று (மார்ச் 30) மாலை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு தனது பவுலிங்கால் அதிர்ச்சி கொடுத்தார் டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க்.

அபிஷேக் வர்மா (1) முதல் ஓவரிலேயே ரன் அவுட் ஆக, ஸ்டார்க் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட்(22), இசான் கிஷன்(2), நிதிஷ் ரெட்டி(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
5 ஓவருக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு, அனிகேத் வர்மா (74) மற்றும் கிளாசென் (32) மட்டுமே பொறுப்புடன் விளையாடி, அந்த அணியை 150 ரன்களை கடக்க உதவினர்.
அவர்களை தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பாப் டு பிளசிஸ் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதேபோல், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 38 ரன்கள், அபிஷேக் போரல் 34 மற்றும் ஸ்டப்ஸ் 21 ரன்கள் எடுக்க, 16 ஓவர்களிலேயே டெல்லி அணி 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.