சிலிண்டர் விலை உயர்வு: நிர்மலா சீதாராமன் அளித்த பதில்!

Published On:

| By Selvam

சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்துக்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை அவர் சந்தித்தார்.

அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டியிருக்கிறது, கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை” என்று கூறினார்.

ADVERTISEMENT

மேலும், “மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டியுள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம்  வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1068.50க்கு விற்பனையானது. மார்ச் மாதம் ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது சிலிண்டரின் விலை ரூ.1,118.50 ஆக உள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான விலை குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கடாய் சோயா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share