டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ராகுல் மேல்முறையீடு!

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 3) மேல்முறையீடு செய்கிறார்.

அகில இந்திய சமூக நீதி கூட்டம்!

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

அனைவருக்கும் ஐஐடி!

சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெறும் அனைவருக்கும் ஐஐடி என்ற‌ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ட்விட்டர் ஸ்பேஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ட்விட்டர் ஸ்பேஸில் கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு!

பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

உடன்பிறப்புகளாய் இணைவோம் திட்டம்!

திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை இணைக்கும் உடன்பிறப்புகளாய் இணைவோம் திட்டம் இன்று தொடங்குகிறது.

பெருங்காமநல்லூர் தியாகிகள் தினம்!

மதுரை பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 317-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபில் கிரிக்கெட் போட்டி!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 172 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: கடாய் சோயா

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts