சென்னைக்கு 260 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக உருமாறிய ‘முரசு’.. இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும்!

By Mathi

|

Published on 2 Nov 2026, 6:11 AM

Cyclone Murasu-Update

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ புயல் இன்று (நவம்பர் 2) அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் ஆந்திர கடற்கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, வட அட்சரேகை 13.6° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 82.5° அருகே புயல் மையம் கொண்டிருந்தது.

ADVERTISEMENT

இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ., ஆந்திராவின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ., மச்சிலிப்பட்டினத்துக்கு தெற்கு தென்கிழக்கே 320 கி.மீ., காவலிக்கு கிழக்கு தென்கிழக்கே 310 கி.மீ., ஓங்கோலுக்கு தென்கிழக்கே 330 கி.மீ., விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 470 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

முரசு புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள், ஆந்திராவின் நெல்லூர் – நரசாபுரம் இடையே ஓங்கோலுக்கு அருகே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் 120 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel