சென்னைக்கு 300 கி.மீ தொலைவில் ‘முரசு’ புயல்!

By Mathi

|

Published on 2 Nov 2026, 2:55 AM

வங்கக்கடலில் ‘முரசு’ புயல் சென்னைக்கு கிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று (நவம்பர் 2) அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடிய முரசு, நள்ளிரவில் ஆந்திராவின் ஓங்கோலுக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 2.38 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று (நவம்பர் 1) இரவு 11.30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் 13.3 டிகிரி வடக்கு அட்சரேகை, 83.0 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டிருந்தது. அதாவது, சென்னைக்கு கிழக்கே 300 கி.மீ., ஆந்திராவின் நெல்லூருக்கு கிழக்கு – தென்கிழக்கே 350 கி.மீ., மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு – தென்கிழக்கே 380 கி.மீ., காவாலிக்கு கிழக்கு – தென்கிழக்கே 370 கி.மீ., ஓங்கோலுக்கு தென்கிழக்கே 400 கி.மீ., விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 490 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.

இந்த முரசு புயல் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.

ADVERTISEMENT

அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) நள்ளிரவு 11.30 மணி முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள் ஆந்திராவின் நெல்லூர் – நர்சாபூர் இடையே, ஓங்கோலுக்கு அருகே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel