சென்னைக்கு 420 கி.மீ தூரத்தில் ‘முரசு’ புயல்.. ஆந்திராவின் ஓங்கோல் ‘டார்கெட்’!

By Mathi

|

Published on 1 Nov 2026, 10:04 PM

Cyclone Murasu-Update IMD

வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை நள்ளிரவில் ஆந்திராவின் ஓங்கோல் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

மேலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ., மச்சிலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 500 கி.மீ., காவலிக்கு கிழக்கு-தென்கிழக்கே 510 கி.மீ., ஓங்கோலுக்கு தென்கிழக்கே 530 கி.மீ., விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

முரசு புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 2) அதிகாலைக்குள் மத்திய மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ந் தேதி இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர்–நரசாபுரம் இடையே, பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும்.

ADVERTISEMENT

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel