பருப்பு தீர்ந்துபோச்சா? கவலையே வேண்டாம்… 5 நிமிடத்தில் வைக்கலாம் இந்த 5 ரசங்கள்

By Minnambalam Desk

|

Published on 1 Nov 2026, 8:00 PM

மதியம் சாப்பிட உட்கார்ந்த பிறகுதான், “அட, பருப்பு இல்லையே” என்று நினைவுக்கு வருவது எல்லா வீடுகளிலும் நடக்கும். அதற்காக ரசமே வைக்காமல் இருக்க முடியுமா? சூடான சாதத்தில் ரசம் ஊற்றி, அப்பளத்தையோ பொரியலையோ தொட்டுச் சாப்பிடும் சுகத்தை விட்டுவிட மனசு வராது.

வீட்டில் இருக்கும் புளி, மிளகு, சீரகம், தக்காளி போன்ற பொருட்களே போதும். தினமும் ஒரே ரசம் சாப்பிட்டு அலுத்துப்போனவர்கள், இந்த ஐந்தையும் ஒவ்வொரு நாளாக முயற்சி செய்து பாருங்கள்.

ADVERTISEMENT

1. மிளகு பூண்டு ரசம்

சளி, இருமல் பிடித்த நாட்களில் பாட்டி வீட்டில் கட்டாயம் இருக்கும் ரசம் இது.

ADVERTISEMENT

தேவை: மிளகு ஒரு ஸ்பூன், பூண்டு 10 பற்கள், மிளகாய் 2, புளித்தண்ணீர் ஒரு கப், உப்பு.

செய்முறை: மிளகையும் பூண்டையும் ஒன்றிரண்டாகத் தட்டிக்கொள்ளுங்கள். புளித்தண்ணீர், இரண்டு கப் தண்ணீர், உப்பு சேர்த்து இவற்றோடு கொதிக்கவிடுங்கள். கடைசியாக, நெய்யில் கடுகு, மிளகாய் தாளித்துக் கொட்டுங்கள்.

ADVERTISEMENT

2. சீரக ரசம்

விருந்து சாப்பாடு ஆனதும் வயிறு கனமாக இருக்கும் நாளில் இது இதமாக இருக்கும். சீரகத்தின் மணமே இதன் ஸ்பெஷல்.

தேவை: சீரகம் 2 ஸ்பூன், மிளகாய் 2, பெருங்காயம் அரை ஸ்பூன், புளித்தண்ணீர் ஒரு கப்.

செய்முறை: சீரகத்தையும் ஒரு மிளகாயையும் இடித்துக்கொள்ளுங்கள். தண்ணீர், புளித்தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வையுங்கள். நுரை கட்டத் தொடங்கியதும், நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்து இறக்குங்கள்.

3. புளி ரசம்

திடீரென விருந்தாளிகள் வந்தால் இதுதான் கைகொடுக்கும். பத்து நிமிடத்துக்குள் தயார்.

தேவை: நெல்லிக்காய் அளவு புளி, சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், தக்காளி ஒன்று, கொத்தமல்லி, உப்பு.

செய்முறை: புளிக்கரைசலில் தக்காளியைப் பிசைந்துவிடுங்கள். சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவுங்கள்.

4. கொள்ளு ரசம்

கொள்ளுவையும் சிவப்பு மிளகாயையும் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தண்ணீரில் தக்காளியைப் போட்டுக் கொதிக்கவிட்டு, இந்தப் பொடியையும் உப்பையும் சேர்க்க வேண்டும். கடைசியாக நெய்யில் தாளித்துக் கொட்டினால், கொள்ளு ரசம் மணக்க ஆரம்பித்துவிடும்.

5. எலுமிச்சை ரசம்

இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தக்காளி, உப்பு ஆகியவற்றைத் தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். அடுப்பை அணைத்த பிறகு எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சீரகம் தாளித்துச் சேருங்கள்.

ஒரு சின்ன டிப்ஸ்: எலுமிச்சைச் சாற்றைக் கொதிக்கும் ரசத்தில் ஊற்றாதீர்கள். அடுப்பை அணைத்த பிறகு சேர்த்தால்தான் கசக்காது, மணமும் புளிப்பும் அப்படியே இருக்கும்.

இந்த ஐந்தையும் செய்யத் தனியாகக் கடைக்கே ஓட வேண்டியதில்லை. அடுத்த முறை பருப்பு இல்லாத நாளில் இவற்றில் ஒன்றைப் போட்டுப் பாருங்கள்.

URL: 5-types-of-dal-free-rasam-recipes-in-tamil

SEO Tags: பருப்பில்லாத ரசம், ரசம் வகைகள், மிளகு பூண்டு ரசம், சீரக ரசம், புளி ரசம், கொள்ளு ரசம், எலுமிச்சை ரசம், எளிய சமையல் குறிப்புகள், தமிழ் சமையல், Rasam Recipes Tamil, Dal Free Rasam, South Indian Recipes, Easy Rasam Recipes

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel