சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் ‘முரசு’ புயல்.. வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

By Mathi

|

Published on 1 Nov 2026, 6:45 PM

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் அதையொட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் நாளை (நவம்பர் 2) தீவிரப் புயலாக வலுப்பெற்று, நள்ளிரவில் ஆந்திராவில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. ஆந்திராவின் நெல்லூருக்குக் கிழக்கு-தென்கிழக்கே 550 கி.மீ., மச்சிலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 560 கி.மீ., ஓங்கோலுக்குத் தென்கிழக்கே 600 கி.மீ., விசாகப்பட்டினத்துக்குத் தெற்கு-தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் முரசு புயல், நாளைகாலை மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் நரசாபுரம் இடையே நவம்பர் 2-ந் தேதி இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முரசு புயல் காரணமாக ஆந்திரா மற்றும் அதையொட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel