முரசு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவம்பர் 2) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் காரணமாக வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 2) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா அறிவித்துள்ளார்.
இதேபோல, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்திலும் இன்று (நவம்பர் 2) ஒரு நாள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.









