அதானி குழுமத்தால் நட்டத்தில் எல்ஐசி, எஸ்பிஐ : காங்கிரஸ் கடும் தாக்கு

Published On:

| By christopher

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவு குறித்து இதுவரை ஒன்றிய நிதி அமைச்சர், செபி, எல் ஐசி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அதானி குழுமத்தின் மோசடி குறித்த அறிக்கை இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இதனால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான 10 நிறுவனங்களும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி சரிந்தது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 7-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஹிண்டன்பெர்க் அறிக்கை வாயிலாக அதானியின் பங்குச்சந்தை மோசடி வெளியே தெரிந்த நிலையில் எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ADVERTISEMENT
congress attack central bjp

இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி உள்ளது.

பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி, அதானி குழுமத்தில் ரூ.77,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன்களில் எஸ்பிஐ-யின் பங்களிப்பு மட்டும் 40 சதவீதம்.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின், அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி முதலீட்டின் மதிப்பு ரூ.77,000 கோடியிலிருந்து ரூ.53,000 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் ரூ.23,500 கோடி இழப்பு.

இருந்தபோதும் அதானி குழுமத்தில் எல்ஐசி இன்னும் ரூ.300 கோடி முதலீடு செய்வது ஏன்? எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதிமந்திரி ஆகியோர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எனினும் இதுவரை ஒன்றிய அரசு, செபி, எல்ஐசி உள்ளிட்ட எவையும் எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி இன்று அதானி குழுமத்திற்கு அளித்துள்ள கடன் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

அதில் “குறைவான அளவிலேயே அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்துள்ளோம். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போவதில்லை” என்று தெரிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு!

U19 உலகக்கோப்பை: இந்தியா சாம்பியன் – மெகா பரிசு அறிவித்த பிசிசிஐ!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: 10வது முறை சாம்பியன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share