நடிகர் அமீர்கானுக்கு தற்போது 60 வயதாகிறது. ஏற்கனவே, அமீர்கான் இரு திருமணம் செய்துள்ளார். முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்தார். இரு குழந்தைகளும் பிறந்தன. 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, கிரண் ராவை திருமணம் செய்தார். கிரண் ராவுக்கு ஒரு மகன் உண்டு. பின்னர், இருவரும் பிரிந்து விட்டனர். Aamir Khan New Girlfriend
எனினும், தனது முன்னாள் மனைவிகளுடன் அமீர்கான் நல்ல தொடர்பில்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில், கவுரி ஸ்பார்ட் என்பருடன் அமீர்கான் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, அது உண்மையாகியுள்ளது.
தனது பிறந்த நாளை முன்னிட்டு நெருங்கிய நண்பர்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோருடன் நேற்று டின்னர் நிகழ்ச்சியில் அமீர்கான் பங்கேற்றார். அப்போது, கவுரி ஸ்பார்ட்டை அவர்களிடத்தில் அமீர்கான் அறிமுகப்படுத்தி வைத்தார். அதே போல, தனது குடும்பத்தினரிடத்திலும் கவுரியை அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது.Aamir Khan New Girlfriend
பெங்களூருவில் வசித்து வரும் கவுரியின் தந்தை பிரிட்டனை சேர்ந்த தமிழர் ஆவார். தாயார் பஞ்சாப்பை சேர்ந்தவர். லண்டனில்தான் படித்துள்ளார். தனது தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்றும் கவுரி கூறுகிறார். தற்போது, அழகுக்கலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கணவரை விவகாரத்து செய்து விட்டதாகவும் தெரிகிறது. 6 வயது மகனும் கவுரிக்கு இருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கிரண் ராவை அமீர்கான் பிரிந்த பிறகு, மீண்டும் கவுரியை அமீர்கான் சந்தித்துள்ளார். அப்போது, இருவருக்குள் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலிக்கின்றனர். லைவ் இன் டுகெதராகவும் வாழ்ந்து வருகின்றனர். விரைவில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் உள்ளது. இன்று அமீர்கானுக்கு 60வது (மார்ச் 14) பிறந்த நாள் ஆகும்.இதை முன்னிட்டு நேற்று மீடியாக்களிடத்தில் கவுரியை அமீர்கான் அறிமுகப்படுத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.