மிதுன் சக்கரவர்த்தியுடன் வாழ ஆசை… ஸ்ரீதேவியின் நிறைவேறாத கனவு!

Published On:

| By Kumaresan M

நடிகை ஸ்ரீதேவி தமிழ்ப்படங்களை போலவே ஏராளமான மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். பிரேம் நசீருடன் படங்களில் நடித்த போது, தான் ஆசிர்வதிக்கப்பட்டதை போல உணர்ந்தாக ஸ்ரீதேவி கூறியது உண்டு. ஸ்ரீதேவி சினிமாவுக்குள் நுழைந்த அதே காலக்கட்டத்தில் மலையாள இயக்குனர் ஆலப்புழா அஷ்ரப்பும் மலையாளப்படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். sridevi relationship with actor

தற்போது , அஷ்ரப் ஸ்ரீதேவி பற்றி சில விஷயங்களை மலையாள சேனல் ஒன்றில் கூறியுள்ளார். அவர் தெரிவித்திருந்ததாவது, “நடிகை ஸ்ரீதேவி சொத்து, ஆடம்பரம், நகை, கோடிகளில் கார் என ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆனாலும், அவருக்குள் இனம் புரியாத சோகம் இருந்து கொண்டேதான் இருந்தது.

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை ஸ்ரீதேவி காதலித்தார். இருவரும் லிவிங் டுகெதராக வாழ்ந்ததாகவும் தகவல் உண்டு. சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு மிதுனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழ வேண்டுமென்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், இந்த ஆசை நிறைவேறவில்லை.

பின்னர்தான் போனி கபூர் , ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்தார். ஸ்ரீதேவியை திருமணம் செய்த போது, போனிகபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகளுக்கு ஸ்ரீதேவி வயது இருக்கும். மிதுனுடன் வாழ முடியாத ஏக்கம் ஸ்ரீதேவிக்கு இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் காதலை மறந்து போனிகபூருடன் மகிழ்ச்சியாகவே வாழ தொடங்கினார். சினிமாவில் இருந்து விலகி குடும்பம், குழந்தை என்று அவரின் வாழ்க்கை போய் கொண்டிருந்தது. sridevi relationship with actor

இந்த நிலையில்தான், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடிகை ஸ்ரீதேவி துபாயிலுள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்த போது, அறையிலுள்ள நீச்சல் டப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது, அவரின் கணவர் போனிகபூரிடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். உண்மை கண்டறியும் கருவி கொண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, போனி கபூரை துபாய் போலீசாரை விடுவித்தனர்.

ஸ்ரீதேவி 200 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தாகவும், அந்த பணத்துக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அப்போது வதந்தி பரவியது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share