நடிகர் அமீர்கான் 3வது முறையாக காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் 3 கான்களில் அமீர்கானும் ஒருவர். தற்போது, 59 வயதான இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு, ஜூனைத் மற்றும் ஈரா என்ற இரு குழந்தைகள் உண்டு. 2002 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.
தொடர்ந்து, இயக்குநர் கிரண் ராவை அமீர்கான் திருமணம் செய்தார். கிரன்ராவுக்கு ஆசாத் என்ற மகனும் உண்டு. இந்த திருமணமும் நீடிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனால், முன்னாள் மனைவிகளை விட்டு அமீர்கான் பிரிந்தாலும் அவர்களுடன் நட்புடன்தான் அமீர்கான் உள்ளார். ரீனா, கிரண் இருவருடன் சேர்ந்து படங்களை எடுப்பது போன்ற பணிகளிலும் அமீர்கான் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தற்போது, தனியாக வசித்து வரும் அமீர்கான் மூன்றாவது முறையாக காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான அவர் பெங்களுருவை சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பெண்ணை தனது குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் பிலிம்பேர் செய்தி வெளியிட்டுள்ளது.
அமீர்கான் தற்போது பெரியதாக படங்களில் நடிப்பதில்லை. படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து கொண்டுள்ளார். தற்போது, அவரின் இயக்கத்தில் Sitaare Zameen Par என்ற படம் மட்டும் தயாராகிக் கொண்டிருக்கிறது.