லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ள இளையராஜாவுக்கு அரசு சார்பில் விழா நடத்த இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 13) தெரிவித்துள்ளார். tn govt take function for ilaiyaraaja : mkstalin
திரையுலகில் அசைக்க முடியாக ஆளுமையாக திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள ஈவெண்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தான் இயற்றிய ’வேலியண்ட் நம்பர் 1’ என பெயரிடப்பட்ட மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்தனர். இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்ததும், அரங்கில் கூடியிருந்த 3500க்கும் மேற்பட்ட ரசிகர்களும் கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், ரஜினிகாந்த், சிவகார்த்தியேன் உட்பட ஏராளமான திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்டாலின் இல்லத்தில் இளையராஜா tn govt take function for ilaiyaraaja : mkstalin
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று சென்று நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. அப்போது, சிம்பொனி இசை நிகழ்ச்சி குறித்து ஆவலுடன் கேட்டறிந்தார் ஸ்டாலின்.
பின்னர் வாசல் வரை வந்து இளையராஜாவை வழியனுப்பி வைத்த ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இளையராஜாவுக்கு அரசு சார்பில் விழா நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில், ”இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.