நடிகை ஹீரா இதயம் படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். தற்போது, சினிமா உலகில் இருந்து முற்றிலும் விலகி விட்டார். இப்போது, அவரைப்பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளி வந்துள்ளது. நடிகை ஹீரா தமிழ் சினிமாவை விட்டு வெளியேற, ஒரு தமிழ் ஹீரோதான் காரணமாக இருந்துள்ளார்.
இது குறித்து பிரபல சினிமா பத்திரிகைளாளர் சபிதா ஜோசப் சினியுலகம் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
‘நடிகை ஹீராவின் தந்தை ராணுவ அதிகாரி. இதனால், அவங்க ஒவ்வொரு மாநிலமாக மாறி மாறி போக வேண்டிய சூழலில் வளர்ந்தாங்க. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுரியில் உளவியல் படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தாங்க. அப்போது, அவரின் புகைப்படங்களை பார்த்து விட்டு பிரபல பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கய் தன் படங்களில் நடிக்க கேட்டார். ஆனால், அப்போது, படங்களில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று ஹீரா மறுத்து விட்டார். actress heera love story

பின்னர், 1991ஆம் ஆண்டு இயக்குநர் கதிர் இதயம் படத்தின் கதையை சொல்லி ஹீராவை கன்வின்ஸ் செய்தார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது. தயாரிப்பாளர் தியாகராஜன் திரையுலகில் கட் அண்டு ரைட்டா இருப்பாரு. சொல்ற சம்பளத்தை சரியாக கொடுத்துடுவாரு. அதேபோல, சரியா கால்ஷீட்டுக்கு வரனும்னு நினைப்பாரு. தியாகராஜனும் ஹீராவை பார்த்து நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்தே, ஹீரா இதயம் படத்தில் நடிக்க முடிவு செய்தார்.

சரத்குமாருடன் ஹீரா நடித்த போது, அவரை லவ் பண்ண ஆரம்பிச்சாரு. சரத்குமார் விழுந்து விழுந்து லவ் பண்ணாரு. ஆனா, ஒரு கட்டத்தில் ஹீராவை கட்டுப்படுத்த ஆரம்பிச்சாரு. இது பிடிக்காமல், அவரை விட்டு ஹீரா விலகிட்டாங்க. அப்புறம் தொடரும் படத்தில் இருந்து அஜித்குமாருக்கும் ஹீராவுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. ஹீராவை திருமணம் செய்ய போவதாக அஜித்குமார் பெற்றோரிடத்தில் கூறியதும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது. இப்போதுதான், நீ வளர்ந்துட்டு இருக்கிறாய், அதுக்குள்ள கல்யாணம் அப்படி இப்படினு போனா, மார்க்கெட் போயிடும்னு கூறி வீட்டில் மறுப்பு தெரிவிச்சுட்டாங்க. actress heera love story
தொடர்ந்து, அஜித்தின் பெற்றோர், ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் கூறி ஹீராவை எச்சரிக்க சொன்னாங்க. அந்த தயாரிப்பாளரும் அந்த பையனோட வாழ்க்கையில் விளையாடாதே என்று கூறி ஹீராவை எச்சரித்துள்ளார். இதையடுத்து, அவங்க தமிழ் சினிமாவை விட்டு வெளியேறிட்டாங்க. ஹீரா பல மொழிகள்ள கிட்டத்தட்ட 49 படங்கள் பண்ணிருந்தாங்க. இப்போது, 49 வயதாகிறது. இப்போதும், சிங்கிளா தான் இருக்காங்க’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.