AI-யால் 100 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்: பில் கேட்ஸ் பகீர் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

Bill Gates

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தவறான நோக்கம் கொண்டவர்களின் கைகளுக்குச் சென்றால், 100 கோடி பேர் உயிரிழக்க காரணமாகும் நிகழ்வுகளைக்கூட உருவாக்கும் அளவுக்கு அது சக்திவாய்ந்ததாக இருப்பதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

NBC News-ன் Meet the Press நிகழ்ச்சிக்காக கிறிஸ்டன் வெல்கருக்கு பில் கேட்ஸ் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழுமையான பேட்டி செப்டம்பர் 27-ஆம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்த பேட்டியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பில் கேட்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பில் கேட்ஸ் அளித்த பதில்: 100 கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் அளவுக்கு AI நிச்சயமாக சக்தி வாய்ந்தது. தீய நோக்கம் கொண்டவர்கள் சமீபத்திய AI கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற சக்திவாய்ந்த ஆயுதம் இதுவரை இருந்ததில்லை.

ADVERTISEMENT

AI நிறுவனங்கள் தங்களுக்குத் தாங்களே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகள் மட்டும் போதுமானவை என்று யாரும் நினைக்கவில்லை. AI-ஐ ஒழுங்குபடுத்த அமெரிக்க நாடாளுமன்றம் நிச்சயமாக சட்டம் இயற்ற வேண்டும்.

AI பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு குறித்த விவாதத்தில் சட்ட அமலாக்க அமைப்புகளும் அரசியல்வாதிகளும் பங்கேற்க வேண்டும். அது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு பில்கேட்ஸ் பதிலளித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share