இந்திய ஏ அணியை அறிவித்த பிசிசிஐ… கேப்டன் ’சுப்மன் கில்’ இல்லையா? ஏன்?

Published On:

| By christopher

bcci announced india A squad ahead of eng tour

ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ‘ஏ’ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்தது. bcci announced india A squad ahead of eng tour

2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாகவும், துருவ் ஜூரெல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ADVERTISEMENT

வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதற்கு முன்னதாக இந்திய ‘ஏ’ அணி மே 30 ஆம் தேதி கேன்டர்பரியில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதே அணி ஜூன் 13 ஆம் தேதி பெக்கன்ஹாமில் நடைபெறும் ‘இன்ட்ரா-ஸ்குவாட்’ ஆட்டத்தையும் எதிர்கொள்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ‘ஏ’ அணியை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்தது.

ஆஸ்திரேலியாவில் 2024-25 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாகவும், துருவ் ஜூரெல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்க போட்டியிடும் சுப்மன் கில், இரண்டாவது ஆட்டத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சக வீரர் சாய் சுதர்சனுடன் ‘ஏ’ அணியில் இணைவார்.

3 சிஎஸ்கே வீரர்களுக்கு அணியில் இடம்!

ஐபிஎல் தொடர் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரேஸில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த சுப்மன் கில், மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இரண்டாவது போட்டியில் இணைய உள்ளனர்.

இவர்கள் தவிர ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப், சர்பராஸ் கான், ஹர்ஷித் ராணா மற்றும் தனுஷ் கோட்டியன் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சியாக சிறப்பாக விளையாடிய விதர்பா அணியைச் சேர்ந்த கருண் நாயர், ஹர்ஷ் துபே ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த அன்ஷுல்ராஜ் காம்போஜ், கலீல் அகமது, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ‘ஏ’ அணி அறிவிப்பு!

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல்ராஜ் காம்போஜ், கலீல் அகமது, ருத்துராஜ் கெய்க்வாட், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே, ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share