என் வீட்டுக்கு எதற்காக போலீஸ் வந்தார்கள்?: முதல்வர் விஜய்யிடம் பாலாஜி முருகதாஸ் கேள்வி!

By Kavi

|

Published on 9 Nov 2026, 2:41 PM

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து அவர் வீட்டில் நேற்று இரவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 9 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகளுக்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பயன்பாடு என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் 15 போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

அப்போது அவர்களை பாலாஜி முருகதாஸ் வீடியோ எடுத்துள்ளார். 

ADVERTISEMENT

அதில் போலீசார் நீங்கள் வீடியோ எடுத்தால் நாங்களும் எடுப்போம் என்று கூறுகின்றனர். 

இதற்கு பாலாஜி முருகதாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு கிளீன் பர்சன். என்னுடைய ரத்தத்தை வேண்டுமானாலும் பரிசோதித்து பாருங்கள். வீடு முழுவதும் சோதனை செய்து கொள்ளுங்கள். 

ADVERTISEMENT

எதற்கு வந்திருக்கிறீர்கள் இப்போது. ட்ரக்ஸ் இருக்கிறதா இந்த செக் செய்து கொள்ளுங்கள்” என்றார். 

இதற்கு போலீசார் நீங்கள் பிரபலமானவர், தயவு செய்து சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்கின்றனர். 

இதற்கு பாலாஜி முருகதாஸ் நான் ஒத்துழைப்பு தருகிறேன், நான்தான் உங்களை உள்ளே அழைத்தேன் என்று பதில் அளித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் தனது பக்கத்தில் முதல்வர் விஜயை டேக் செய்து, “யார் புகார் கொடுத்தார்கள் என்பதை மட்டும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். யார் புகார் கொடுத்தார்கள், எதற்காக கொடுத்தார்கள் என்று நான் பலமுறை கேட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை. ரத்த பரிசோதனைக்கும் நான் தயார். இது உங்கள் காவல்துறைக்கு அசிங்கம். 

15 போலீசார் என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் பார்த்ததெல்லாம் மூன்று பூனைகளும் ஒரு நாயும்தான். நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதால் சர்ச் வாரண்ட் இல்லாமலேயே போலீசாரை வீட்டுக்குள் அழைத்தேன். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எனக்கு உரிய விளக்கம் தேவை.

இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன். 30 ஆண்டுகள் கடின உழைப்பு, போராட்டம் கஷ்டம்…. வாரிசு நடிகர்களிடம் இதை செய்வீர்களா. காவல்துறைக்கு இது அசிங்கம்” என கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாலாஜி முருகதாஸ் தற்போது சோனி லைவ் தொலைக்காட்சியில ஒளிபரப்பப்படும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel