தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் அவினாசி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
அவினாசி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

அவினாசி சட்டமன்ற தொகுதி இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. என்டிஏ கூட்டணியில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இங்கு போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் 2016, 2021 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகவும். இந்த தேர்தலில் தனக்கு அதிமுக சீட் வழங்காததால் தனபால் அதிருப்தியில் இருக்கிறார்.
அதேசமயம் எல் முருகன் அவினாசி தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக கோகிலா மணி, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளராக கமலி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி-37%
அதிமுக கூட்டணி (பாஜக)-41%
தவெக-15%
நாதக-6% வாக்குகள் பெறும்
பாஜக வேட்பாளர் எல்.முருகன் கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்









