தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
அருப்புக்கோட்டை வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

அருப்புக்கோட்டை தொகுதி… இதுவும் முக்கியமான தொகுதி.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் களம் காணக் கூடிய தொகுதி. 2016, 2021-ல் தொடர்ந்து இந்த தொகுதியில ஜெயிச்சுகிட்டு இருக்கிறார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.
2011-ல் அதிமுகவின் வைகைச் செல்வன் இங்கே போட்டியிட்டு ஜெயிச்சிருந்தாரு.
இந்த முறையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் களம் காண்கிறார். 2011, 2016, 2021 தேர்தல்களில் சாத்தூர் ராமச்சந்திரன் – வைகை செல்வன் இடையேதான் போட்டி இருந்தது.
இம்முறை இங்கே வைகைச் செல்வனுக்கு பதிலாக அதிமுக சேதுபதி என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 44%
அதிமுக – 35%
தவெக- 12%
நாதக- 6% வாக்குகள் பெறும்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 9 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் நல்ல லீடிங்கில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
