மதத்தைப் பார்த்து ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட்டுட்டீங்களே.. அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On:

| By Mathi

DMK Anitha Radhakrishnan

மதத்தைப் பார்த்து முதல்வர் ஜோசப் விஜய்க்கு (Joseph Vijay) பொதுமக்கள் ஓட்டு போட்டுவிட்டனர் என திமுக (DMK) முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் (Anitha Radhakrishnan) பேசியுள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

ADVERTISEMENT

அனிதா ராதாகிருஷ்ணன் பெயர் இந்துவா இருக்கு.. நான் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் அப்படின்னு சொன்னா… நீங்க ஓட்டு போடுவீங்க… நாங்க உங்கள மத அடிப்படையில் பார்த்தோமா? ஜாதிய அடிப்படையில் பார்த்தோமா?

ஜோசப் விஜய்-க்காக ஓட்டு

ஆனால் நீங்கள் மதத்தைப் பார்த்து விஜய் ஜோசப் என்ற உடன் ஓட்டுப் போட்டுவிட்டீங்க.. எங்க தலைவர் ஸ்டாலினை அசைக்க முடியுமா? உங்க மதத்தையா ஸ்டாலின் பார்த்தாரு?
நீங்க ஜோசப் என்ற உடன் விஜய்க்கு ஓட்டுப் போட்டுட்டீங்களே?

ADVERTISEMENT

ஒரு இடத்துல விஜய்னு போட வேண்டியது, இன்னொரு இடத்துல ஜோசப் விஜய்னு போட வேண்டியது. கிறித்தவர் ஓட்டை வாங்கணும்னா ஜோசப் விஜய், இந்து ஓட்டை வாங்கணும்னா விஜய்… வெறும் விஜய்.

இப்படி மக்களை ஏமாத்தி, சின்னப் பிள்ளைகளெல்லாம்… ‘ஏம்மா ஏம்மா ஏம்மா விஜய்க்கு ஓட்டு போடு, ஏம்பா ஏம்பா விஜய்க்கு போடு, ஏப்பா விஜய்க்கு போடு’னு… இப்படி ஏமாத்தி இன்னைக்கு ஜெயிச்சிருக்காங்கன்னு சொன்னா… இன்னும் ஒரு மூணு மாசம், நாலு மாசம் தான் ஓட்டுவாங்க. அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய நம்ம தளபதிதான் ஆட்சி அமைப்பார். அதுல எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share